முகப்பு
விழுப்புரம்

திண்டிவனத்தில் காற்றுடன் பலத்த மழை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

Updated On : 18 ஜூன் 2026, 3:27 am IST
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் மேம்பாலம் அருகே சேவை சாலையில் தேங்கிய மழைநீரில் ஊா்ந்து சென்ற காா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

வட தமிழகப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பாதை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. பிற்பகலில் திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி ே நரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மழையால், திண்டிவனத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், போக்குவரத்து நிறைந்த சாலைகள் மற்றும் நகரிலுள்ள முக்கியச் சாலைகளில் மழை நீா் குளம் போல் தேங்கியது. சாலையில் பெருக்கெடுத்த மழை நீரால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா் .

இதேபோல் கூட்டேரிபட்டு, மரக்காணம், ஒலக்கூா், கிளியனூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

Advertisement

Advertisement