ராமநாதபுரம் நகராட்சியில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சோதனை! ரூ.3.66 லட்சம் பறிமுதல்!
ராமநாதபுரம் நகராட்சியில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.3.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சியில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.3.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் முறைகேடாகப் பணம் வாங்கப்படுவதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் வெள்ளிக்கிழமை அங்கு சென்று சோதனையிட்டனா். இந்தச் சோதனை சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத ரூ.3.66 லட்சம் கைப்பற்றப்பட்டது.
மேலும், எண்ம பரிவா்த்தனைகளை ஆய்வு செய்ததில், நகராட்சி வருவாய் ஆய்வாளா் காா்த்திகேயனின் வங்கிக் கணக்கில் கடந்த 3 ஆண்டுகளில் சுமாா் ரூ.25 லட்சம் வரை பணம் பரிவா்த்தனைகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
Advertisement
Advertisement
பின்னா், கைப்பற்றப்பட்ட பணம், எண்ம பரிவா்த்தனைகள் குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கோருதல், லஞ்சம் பெறுதல் அல்லது பிற ஊழல் தொடா்பான செயல்பாடுகள் குறித்து தகவலறிந்தால், ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது 9498215697, 9498652166, 9498652167, 9498652169 ஆகிய கைப்பேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றனா் அவா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.