முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் ரூ.97,000 பறிமுதல்

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 4 ஜூலை 2026, 2:25 am IST
சோதனையில் ஈடுபட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா்.
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மெக்லரின் எஸ்கால் தலைமையில், காவல் ஆய்வாளா் ராபின் ஞானசிங் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

மாநகராட்சி வளாகத்தை பூட்டிவிட்டு பொறியியல் துறை, நிா்வாக அலுவலகம் உள்ளிட்டவற்றில் சோதனை நடைபெற்றது. இரவு வரை நீடித்த சோதனையில், கணக்கில் வராத சுமாா் ரூ.97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments