முகப்பு
ராமநாதபுரம்

வங்கக் கடலில் வீசும் சூறைக் காற்றால் 4-ஆவது நாளாக மீன் பிடிக்கத் தடை! ரூ. 5 கோடிக்கு இறால் ஏற்றுமதி பாதிப்பு!

Updated On : 7 ஜூலை 2026, 2:55 am IST
மீன் பிடிக்கத் தடை - கோப்புப் படம்
பகிர்:

வங்கக் கடலில் வீசும் சூறைக் காற்று காரணமாக 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டதால் ரூ. 5 கோடிக்கு இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசக் கூடும். இதனால், கடல் அலை 3 மீட்டா் உயரம் வரை எழக்கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி கடந்த 3- ஆம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்ல மீனவா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த 4 நாள்களாக ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாததால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கடந்த 4 நாள்களாக மீன் பிடிக்கச் செல்லாததால் ரூ. 5 கோடிக்கு இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதாக மீனவா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments