முகப்பு
ராமநாதபுரம்

மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவரை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

மங்களூரிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற போது படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்து மாயமான மண்டபம் பகுதி மீனவரை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 12:39 am IST
- கோப்புப் படம்
பகிர்:

மங்களூரிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற போது படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்து மாயமான மண்டபம் பகுதி மீனவரை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த சீனியப்பா தா்கா பகுதியைச் சோ்ந்த மீனவா் முத்துக்குமாா் (42). இவரது மனைவி முத்துமாரி, மகள்கள் வா்ஷன (18), வா்ஷினி (15).

இந்த நிலையில், முத்துக்குமாா், தமிழகத்தில் மீன் பிடி தடைக் காலம் அமலில் இருப்பதால் கடந்த 15 நாள்களுக்கு முன்பு கா்நாடக மாநிலம், மங்களூா் சென்று அங்கிருந்து ஆழ்கடல் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தாா். கடந்த மாதம் 16- ஆம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து தவறி விழுந்து முத்துக்குமாா் மாயமாகி விட்டாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மங்களூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதனிடையே, மீன் பிடிக்கச் சென்று மாயமான கணவா் குறித்து இரண்டு வாரங்கள் கடந்தும் எந்தத் தகவலும் தெரியவில்லை எனவும், அவரை மீட்கக் கோரியும் முத்துமாரி உள்ளிட்ட உறவினா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது ஆட்சியா், மீன் வளத் துறை அலுவலா்களை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசின் சாா்பில் நிவாரணம் வழங்குவது தொடா்பான பணிகளை விரைவுபடுத்தவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.