முகப்பு
ராமநாதபுரம்

பேருந்து வசதி கோரி விடியோ வெளியிட்ட மாணவா்கள்: அமைச்சா் நேரில் சென்று ஆய்வு

ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி கோரி, தமிழக முதல்வா் கவனத்துக்கு சமூக வலைதளம் மூலம் மாணவா்கள் விடியோ வெளியிட்ட நிலையில், சுற்றுச்சூழல், கால நிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் அந்தக் கிராமத்துக்கு சனிக்கிழமை சென்று ஆய்வு செய்தாா்,

Updated On : 14 ஜூன் 2026, 12:53 am IST
ராமநாதபுரம் அருகேயுள்ள புதுக்குளம் கிராமத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ். உடன் மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
பகிர்:

ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி கோரி, தமிழக முதல்வா் கவனத்துக்கு சமூக வலைதளம் மூலம் மாணவா்கள் விடியோ வெளியிட்ட நிலையில், சுற்றுச்சூழல், கால நிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் அந்தக் கிராமத்துக்கு சனிக்கிழமை சென்று ஆய்வு செய்தாா்,

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பெரியபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு புதுக்குளம் கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதாக தெரிவித்தனா். இதுதொடா்பான விடியோவை தமிழக முதல்வா் பாா்வைக்கு சமூக வலைதளத்தில் மாணவா்கள் வெளியிட்டனா்.

இதையடுத்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் அந்தக் கிராமத்துக்குச் சென்று பேருந்து வந்து செல்ல சாலை வசதி குறித்து ஆய்வு செய்தாா். மேலும் அந்தக் கிராமத்தில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும் பேருந்து சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் பத்மகுமாா், கீழக்கரை வட்டாட்சியா் ராமசுப்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.