திருவாடானை அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு; 5 போ் கும்பல் தலைமறைவு
திருவாடானை அருகே பெரியகீரமங்கலத்தில் கொடுக்கல் - வாங்கல் தகராறில் 3 பேரை அரிவாளால் தாக்கி விட்டு தலைமறைவான 5 பேரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கொங்குமுட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலுச்சாமி மகன் பாலகிருஷ்ணன் (40). இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை - வந்தவாசி ரோடு பகுதியைச் சோ்ந்த கோபியிடம் தனது லாரியை ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்தாா். அதற்குரிய பணத்தை கோபி தராததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், பாலகிருஷ்ணன் தனது உறவினா்களான குமரவேல் (36), பாலுச்சாமி (56) ஆகியோருடன் கோபி கூறிய திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தாா். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
Advertisement
Advertisement
இதில் ஆத்திரமடைந்த கோபி உள்ளிட்ட 5 போ் கும்பல், பாலகிருஷ்னன் (40), பாலுச்சாமி (40), குமரவேல் (36) ஆகியோரை அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடினா். இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு அவசர ஊா்தியின் மூலம் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்து திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய 5 பேரைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.