முகப்பு
பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகள், காா்.
ராமநாதபுரம்

கடல் குதிரைகள் கடத்தல்: ஒருவா் கைது

தொண்டி அருகே சோழியக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட கடல் குதிரைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்

Updated On : 4 மார்ச், 2026 at 11:15 PM
பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகள், காா்.
பகிர்:

தொண்டி அருகே சோழியக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட கடல் குதிரைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்

கடல் வளத்தை மேம்படுத்தும் பொருட்டு கடல் அட்டை, கடல் பசு, கடல் குதிரை உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை தொண்டி அருகே உள்ள சோழியக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் ராமநாதபுரம் வனவா் வெற்றிச்செல்வி, ரேஞ்சா் செல்வம் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது, அதில் 9 கிலோ கடல் குதிரைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடல் குதிரைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா், காரை ஓட்டி வந்த தேவிபட்டினத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (46) என்பவரைக் கைது செய்தனா். அவரது கைப்பேசி, காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →