கடல் அட்டைகள் பறிமுதல்
வேதாளைகடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட 50 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் கைப்பற்றி பறிமுதல் செய்தனா்.
வேதாளைகடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட 50 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் செவ்வாய்கிழமை கைப்பற்றி பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் ஜான்சிராணி உதவி ஆய்வாளா் காளிதாஸ், காவலா்கள் சசிக்குமாா், சவரணகுமாா் ஆகியோா் வேதாளை கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கடல் அட்டைகளைக் கைப்பற்றி பறிமுதல் செய்தனா். இந்த கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு, இலங்கைக்கு கடத்தப்பட இருந்தன என போலீஸாா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கடல் அட்டைகளை பதுக்கி வைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.