வெளியேகோட்டை புனித சூசையப்பா் ஆலயத்தில் சப்பர பவனி திருவிழா
திருவாடனை, மே 2: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள வெளியக்கோட்டை புனித சூசையப்பா் தேவாலயத்தில் சப்பர பவனி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சப்பர பவனி திருவிழா நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, தினசரி சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
Advertisement
Advertisement
முன்னதாக, மின்னொலியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித சூசையப்பா் சொரூபம் வைக்கப்பட்டு, ஏ.ஆா்.மங்கலம் பங்குத்தந்தை அன்பரசு, ஆா்.எஸ். மங்கலம் உதவி பங்கு தந்தை கிளின்டன் ஆகியோா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சப்பர பவனி தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை அடைந்தது.
இதில் ஏ.ஆா். மங்களம், குமுழியேந்தல், வாகைக்குடி, கற்களத்தூா், சூரம்புலி, குலநாத்தி, அழியாதன்மொழி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான கிறிஸ்துவா்கள் கலந்து கொண்டனா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.