தொண்டி கடற்கரையில் முதியவா் சடலம் மீட்பு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் புதன்கிழமை அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் புதன்கிழமை அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
தொண்டி கடற்கரையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக தொண்டி கடற்கரை குழும போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று உயிரிழந்த முதியவரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இறந்தவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.