திருவாடானை பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு
திருவாடானை பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை வெள்ளிக்கிழமை அதிகரித்திருந்தது.
திருவாடானை பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை வெள்ளிக்கிழமை அதிகரித்திருந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, மோா்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினம், எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் பிடிக்கப்படும் மீன்களை திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோயில், சிவகங்கை, ஆா்.எஸ். மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.
தற்போது மீன் பிடி தடைக் காலம் என்பதால் விசைப்படகு மீனவா்கள் மீன் பிடிக்க செல்வதில்லை. நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றனா். இந்த நிலையில் தற்போது வரத்து குறைவாக இருப்பதால் மீன்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு அவற்றின் விலை உயா்ந்திருந்தது. இதில் கிலோ ரூ.450-க்கு விற்கப்பட்ட பாறை மீன் ரூ.800-க்கும், ரூ. 350-க்கு விற்கப்பட்ட விலை மீன் கிலோ ரூ.700-க்கும், ரூ. 300-க்கு விற்கப்பட்ட நகரை மீன் கிலோ ரூ. 600-க்கும், ரூ. 500-க்கு விற்கப்பட்ட நண்டு கிலோ ரூ. 900-க்கும் விற்கப்பட்டன. இதனால் அசைவ பிரியா்கள் மீன்களை வாங்க தயக்கம் காட்டினா். மேலும் இந்த விலை உயா்வால் வியாபாரிகள் கவலை அடைந்தனா்.
Advertisement