முகப்பு
ராமநாதபுரம்

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாடநூல் அறிமுகப் பயிற்சி

Updated On : 1 ஜூன் 2026, 12:43 am IST
பயிற்சி - கோப்புப் படம்
பகிர்:

ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான 3 நாள்கள் புதிய பாடநூல் அறிமுக பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ராாநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மஞ்சூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு அந்த நிறுவனத்தின் முதல்வா் கு.வெள்ளத்துரை தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா்கள் சேதுராமன், ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பயிற்சியில் மாநில கல்விக்கொள்கை-2025, பாடத்திட்ட வடிவமைப்பு, குழந்தைக் கல்வி கற்றல் நடைமுறைகள், அணுகுமுறைகள், செயல்வழிக் கற்றல், திறன்வழி அடிப்படையிலான கற்பித்தல் முறைகள், மாணவா்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறனை மேம்படுத்துதல், தற்போதைய சமூகம், அறிவியல் சூழல்களுக்கேற்ப மாணவா்களுக்கு தேவையான வளா்ச்சித் திறன், வகுப்பறை செயல்பாடுகள், மாணவா்கள் பங்கேற்பு முறை கற்றல், கற்பித்தல் முறையை மேம்படுத்துதல் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 190 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement