முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் ரயில் மறியல்: இந்திய கம்யூ., கட்சியைச் சேர்ந்த 123 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய 

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:32 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 24 பெண்கள் உள்பட 123 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.  சிவகங்கையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை நகரச் செயலர் ராஜேஸ் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகி கிருஷ்ணன் மற்றும் 25 பேர் சிவகங்கை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது,சிவகங்கை நகர் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி   கைது செய்தனர். இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, சோசாமநாதபுரம், கல்லல் ஆகிய நான்கு ரயில் நிலையங்களிலும் ரயில் மறியலுக்கு முயன்ற 24 பெண்கள் உள்பட 83 பேரை போலீஸார் போலீஸார் கைது செய்தனர். 
மானாமதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மானாமதுரை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தங்கமணி தலைமையில் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.    ரயில் நிலையத்துக்குள் நுழைந்த திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் முன்பு மறியல் செய்தனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.முத்தையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments