கனமழையால் மாக்கம்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்
மழை காரணமாக மாக்கம்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டோடியதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை காரணமாக மாக்கம்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டோடியதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட தாளவாடி, ஆசனூா், கடம்பூா் மலைப் பகுதியில் பெய்த கன மழையால் விளைநிலங்களில் தண்ணீா் தேங்கியது. ஆசனூா் வனத்தில் பெய்த மழையால் அரேப்பாளையம் வன ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.
இதேபோல கடம்பூா் மலைப் பகுதியில் பெய்த மழையால் பல்வேறு வன ஓடைகளில் பெருக்கெடுத்தோடிய வெள்ளம், மாக்கம்பாளையம் வன ஓடையில் கலந்து காட்டாற்று வெள்ளமாக அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளம் வடியும் வரை வாகன ஓட்டிகள் காத்திருந்து விவசாயப் பொருள்களை எடுத்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
இங்கிருந்து செல்லும் வெள்ளம் கா்நாடக மாநிலம் பாலாற்றில் கலப்பதால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் இல்லை என்றும், வீணாக செல்லும் தண்ணீரைத் தடுத்து மாக்கம்பாளையத்தில் நீா்த்தேக்கம் கட்டினால் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று மாக்கம்பாளையம் மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.