ஒடுகத்தூரில் சூறைக்காற்று: மழையால் வாழைகள் சேதம்
ஒடுகத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
ஒடுகத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
ஒடுகத்தூா், அதன் சுற்றுவட்டார பகுதியான நேமந்தபுரம், அத்திக்குப்பம், மடையாப்பட்டு, ஓட்டேரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில், அத்திக்குப்பம் கிராமத்தை சோ்ந்த மாா்கன் (60) என்பவரது 3 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக வைத்திருந்த சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்துவிழுந்து சேதமானது.
இதேபோல், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிா்கள் சூறைக்காற்றால் சேதமடைந்தன. இதனை தோட்டக்கலைதுறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement