திருப்பத்தூரில் விபத்து முதியவர் உயிரிழப்பு
திருப்பத்தூர் அருகே தேவாரம்பூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மருதுபாண்டியன் (55). இவர் இருசக்கர வாகனத்தில் சிவகங்கை ரோடு
திருப்பத்தூர் அருகே தேவாரம்பூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மருதுபாண்டியன் (55). இவர் இருசக்கர வாகனத்தில் சிவகங்கை ரோடு நீதிமன்றம் அருகே வரும் போது, எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மருதுபாண்டி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.