தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா நியமனத்தில் தவறில்லை: செங்கோட்டையன்
தமிழ்நாடு அரசின் தில்லி பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமனம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பற்றி...
தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதில் தவறேதும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, அரசின் பிரதிநிதிகளை நியமிப்பது என்பது அரசின் கொள்கை முடிவுகள். அதற்கு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சம உரிமை இருக்கிறது. பிரதிநிதிகள் தில்லிக்கு தான் செல்வர். இதில் தவறேதும் கிடையாது.
நம் முதல்வரால் நியமிக்கப்பட்ட அத்தனை பேரும், தமிழ்நாட்டுக்காகக் குரல் கொடுப்பார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரையிலும், அனைத்துத் திட்டங்களையும் மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி, நதிநீர்ப் பிரச்னையாக இருந்தாலும் சரி - அதற்காக முழுமையாக வாதிடுவதற்கும் குரல் கொடுப்பதற்கும் நியமிக்கப்பட்ட அத்தனை பேரும் தயாராக இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணாவை நியமித்து, தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அரசாணை வெளியிட்டது.
இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர் என்பதால், தமிழர் அல்லாத ஒருவரை தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக நியமிக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கையில், அம்மாநிலத்தைச் சேர்ந்தவரையே மாநில அரசின் பிரதிநிதியாக நியமிப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட மற்றைய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கேள்விகள் எழுப்பினர்.
தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா, நடிகரும் முதல்வருமான விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
There is nothing wrong with the appointment of Delhi representative K. Venkata Narayana, Minister KA Sengottaiyan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.