மானாமதுரையில் புதிய அரசுப் பேருந்து சேவை, பேருந்து நிறுத்தம் தொடக்க விழா
மானாமதுரையில் புதிய அரசுப் பேருந்து சேவைகள் மற்றும் பேருந்து நிறுத்தம் தொடக்க விழா நடைபெற்றது.
மானாமதுரையில் புதிய அரசுப் பேருந்து சேவைகள் மற்றும் பேருந்து நிறுத்தம் தொடக்க விழா நடைபெற்றது.
மானாமதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்திற்கு புதிய அரசுப் பேருந்து சேவையும் மானாமதுரை ஒன்றியம் கீழப்பசலை கிராமத்திலிருந்து மானாமதுரை வழியாக சிவகங்கைக்கு அரசு நகர்ப் பேருந்து சேவையும் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ தமிழரசி கலந்து கொண்டு புதிய அரசுப் பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மானாமதுரையில் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலையில் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே புதிய பேருந்து நிறுத்தத்தையும் எம்.எல்.ஏ தமிழரசி திறந்து வைத்துப் பேசினார்.
Advertisement
Advertisement
அப்போது தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இங்கு புதிய பேருந்து நிறுத்தத்திற்கான கட்டடம் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார். இவ்விழாவில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணாதுரை, மானாமதுரை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜாமணி, முன்னாள் கவுன்சிலர் முனியசாமி, மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.