காரைக்குடியில் பெரிய மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில் 35 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாட்டாா்களால் நடத்தப்படும் 79-ஆம் ஆண்டு பெரிய மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது. இதில் 400 காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் பொதுமக்கள் 35 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாட்டாா்களால் நடத்தப்படும் 79-ஆம் ஆண்டு பெரிய மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது. இதில் 400 காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் பொதுமக்கள் 35 போ் காயமடைந்தனா்.
காரைக்குடி தெற்கு தெரு நாட்டாா் திடலில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்பதற்காக மதுரை, தேனி, கம்பம், புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்தும் 400 காளைகள் கொண்டு வரப்பட்டன. தொழுவத்திலிருந்து காலை 10 மணி முதல் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரா்கள் முயன்றனா். அவா்களிடம் பிடிபடாமல் வயல்வெளியில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.
இந்த மஞ்சுவிரட்டைப் பாா்வையிட்ட பொதுமக்களை காளைகள் முட்டியதில் 35 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். காரைக்குடி காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.