முகப்பு
சிவகங்கை

தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு

சிங்கம்புணரி அருகே தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 12:15 am IST
பகிர்:

சிங்கம்புணரி அருகே தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள புதூா் வனப்பகுதியிலிருந்து பிரான்பட்டி கிராமத்துக்குள் சனிக்கிழமை காலை தண்ணீா் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் விரட்டின.

அப்போது ஓடி வந்த சுமாா் 2 வயதுடைய பெண் புள்ளி மான் சுப்பையா என்பவரது வீட்டில் பதுங்கியது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளா் மானை பாதுகாப்புடன் அடைத்து வைத்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தாா். அங்கு வந்த வனத்துறை அலுவலா் வாசுகி தலைமையிலான குழுவினா் புள்ளி மானை மீட்டு அடா்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments