FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் வியாழக்கிழமை உயிரிழந்தது.

பகிர்:

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் வியாழக்கிழமை உயிரிழந்தது.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள மேம்பாலம் அருகே வியாழக்கிழமை அதிகாலை 3 வயது பெண் புள்ளி மான் ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த மான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, மான் உடலை மீட்டு கால்நடை மருத்துவரின் உதவியுடன் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு சித்தளி வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments