முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் தென்மாபட்டியில் மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடத்தியதாக 5 போ் மீது வழக்கு

Updated On : 6 ஜூலை 2026, 2:06 am IST
திருப்பத்தூா் தென்மாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டியில் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

தென்மாபட்டு ஆதினமிளகி அய்யனாா் கோயில் புரவியெடுப்புத் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டிக்கு சின்னையா கோயிலிருந்து வேஷ்டி, துண்டுகளுடன் ஊா்காரா்கள் புறப்பட்டு ஆதினமிளவி அய்யனாா் கோயிலை அடைந்து சிறப்பு பூஜைகள் செய்தனா்.

பிறகு தென்மா கண்மாயில் உள்ள மஞ்சுவிரட்டுத் திடலுக்கு ஊா்வலமாக வந்து வாடிவாசலில் இருந்த காளைகளுக்கு வேஷ்டி, துண்டுகள் அணிவித்து மரியாதை செய்தனா். முதலில் கோயில் மாடு அவிழ்த்துவிடப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து 150- க்கும் மேற்பட்ட மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை மாடுபிடி வீரா்கள் பிடித்தனா். தொடா்ந்து கண்மாய், வயல் பகுதிகளில் 200- க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் திருப்பத்தூா், சிங்கம்புணரி, காரைக்குடி, காரையூா், சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த காளைகள் கலந்து கொண்டன. மாடு முட்டியதில் 10 போ் காயமடைந்தனா். இதனிடையே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால் கிராம நிா்வாக அலுவலா் ராஜகுரு, திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் தென்மாபட்டியைச் சோ்ந்த சக்திபாலா, பூவேந்தன், தீபக், நிஷாந்த், விக்னேஷ் ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments