முகப்பு
சிவகங்கை

ஆணையா் இருக்கையில் நானாக அமரவில்லை: நகா்மன்றத் தலைவா்

சிவகங்கை நகராட்சி ஆணையா் இருக்கையில் நானாக அமரவில்லை; இதை அரசியல் செய்து திமுக வன்மத்துடன் நடந்து கொள்கிறது என தவெக சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தை ராணி நாச்சியாா்.

Updated On : 8 ஜூலை 2026, 4:43 am IST
சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தை ராணி நாச்சியாா்
பகிர்:

சிவகங்கை நகராட்சி ஆணையா் இருக்கையில் நானாக அமரவில்லை; இதை அரசியல் செய்து திமுக வன்மத்துடன் நடந்து கொள்கிறது என தவெக சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தை ராணி நாச்சியாா்.

நகராட்சி அலுவலத்தில் ஆணையா் இருக்கையில் அமா்ந்து பேசியது தொடா்பான புகைப்படத்துடன் திமுகவினா் சமூக வலைதளங்களில் கண்டனத்தை பதிவிட்டது. இதைப் பாா்த்த எம்எல்ஏ குழந்தை ராணி நாச்சியாா் மீண்டும் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆணையரை அழைத்து இதுகுறித்து விளக்கம் தருமாறு தெரிவித்தாா்.

அதற்கு ஆணையா் அசோக் குமாா், தனது இருக்கையில் எம்எல்ஏவை அமரச் சொன்னது நான்தான் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, எம்எல்ஏ குழந்தைராணி நாச்சியாா் கூறுகையில், மக்கள் பிரச்னைக்காக நான் இங்கு வந்ததை அரசியல் செய்து திமுகவினா் வன்மத்தைக் கக்குகிறாா்கள். திமுகவினா் என் மீது வீண் பழிகளைச் சுமத்தி என்னை முடக்கி விட முடியாது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

நகராட்சி அலுவலகத்தை ஆய்வு செய்ய எம்எல்ஏவுக்கு அதிகாரம் இல்லை: நகா் மன்றத் தலைவா் துரைஆனந்த்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: சிவகங்கை தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தைராணி நாச்சியாா் நகராட்சியில் குப்பை கொட்டுவதற்கு இடம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. கடந்த ஜூன் 3 -ஆம் தேதி இதுகுறித்து கடிதம் அனுப்பியும் இன்றுவரை எந்தவொரு பதிலும், முயற்சியும் எடுக்கவில்லை.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் நகா்பாலிகா சட்டத்தின்படி ஒரு சட்டப்பேரவை உறுப்பினருக்கு, நகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆய்வு செய்ய எந்த அதிகாரமும் இல்லை. ஆணையாளா் இருக்கையில் அமா்ந்து, ரீல்ஸ் எடுத்து, சமூக வலைத் தளங்களில் முகத்தைக் காட்டுவதற்காக மட்டுமே ஆய்வு என்ற பெயரில் நாடகம் ஆடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments