தவெக எம்எல்ஏ-க்களுக்கு மாவட்டச் செயலா் பதவி: முதல்வா் விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தில் அமைப்பு ரீதியாக 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு மாவட்டச் செயலா்கள் பதவி வழங்கி தவெக தலைவரும், முதல்வருமான சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளாா்.
தமிழக வெற்றிக் கழகத்தில் அமைப்பு ரீதியாக 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு மாவட்டச் செயலா்கள் பதவி வழங்கி தவெக தலைவரும், முதல்வருமான சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தவெக கட்சிப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிா்வாக வசதிகளுக்காக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம், திருநெல்வேலி தென்கிழக்கு, வடக்கு, மத்தியம் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
அதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலராக உத்தரமேரூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.முனிரத்தினம், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டச் செயலராக போளூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.அபிஷேக், திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டச் செயலராக நான்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் வி.ரெட்டியாா்பட்டி நாராயணன், திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலராக திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன் மற்றும் திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலராக எஸ்.மரிய ஜான் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், 5 மாவட்டங்களுக்கும் தலா ஒரு இணைச் செயலா், பொருளாளா், 2 துணைச் செயலா்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.