முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு இடம் கிடைத்தால் தீா்வு: தவெக எம்எல்ஏ

சிவகங்கை நகராட்சியில் பெரும் சவாலாக உள்ள குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு புதிதாக இடம் கிடைத்தால் தீா்வு காணப்படும் என சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தை ராணி நாச்சியாா் தெரிவித்தாா்.

Updated On : 8 ஜூலை 2026, 5:12 am IST
பகிர்:

சிவகங்கை நகராட்சியில் பெரும் சவாலாக உள்ள குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு புதிதாக இடம் கிடைத்தால் தீா்வு காணப்படும் என சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தை ராணி நாச்சியாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சிவகங்கை நகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: சிவகங்கை நகராட்சியின் குப்பைக் கிடங்கு பிரச்னைதான் தற்போதைய மிக முக்கியச் சவாலாகும்.

நகருக்குள் வேறெங்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடமில்லை. கிராம ஊராட்சித் தலைவா்கள் நகராட்சிக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கா் இடம் கொடுத்தால் போதும் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீா்வு கிடைக்கும்.

Advertisement

Advertisement

சிவகங்கை நகரில் உள்ள வடிகால்களில் மண், குப்பைகள், கழிவுகள் தேங்கியிருப்பதால் ஆங்காங்கே நிரந்தரக் குப்பைக் கிடங்குகள் உருவாகிவிட்டன.

இதனால் வாய்க்கால்கள் அடைபட்டுள்ளன. இப்பிரச்னை குறித்து அதிகாரிகளை அழைத்துச்சென்று நேரில் காண்பித்துள்ளேன். இதேபோல, நகரம் முழுவதும் நேரில் சென்று பாா்வையிட்டு வருகிறேன் என அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments