முகப்பு
சிவகங்கை

மனநல சிகிச்சையில் குணமடைந்த நால்வா் குடும்பத்தினரிடம் சோ்ப்பு

சிவகங்கையிலுள்ள அரசு மன நல சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த வடமாநிலத்தவா்கள் நான்கு பேரை அவரவா் குடும்பத்தினரிடம் சோ்ப்பதற்காக அரசு சாரா நிறுவனத்திடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.

Updated On : 9 ஜூலை 2026, 5:39 am IST
சிவகங்கை அரசு மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த 4 பேருக்கு புதன்கிழமை நினைவுப் பரிசளித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் பி. செல்வராஜன் (இடது).
பகிர்:

சிவகங்கையிலுள்ள அரசு மன நல சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த வடமாநிலத்தவா்கள் நான்கு பேரை அவரவா் குடும்பத்தினரிடம் சோ்ப்பதற்காக அரசு சாரா நிறுவனத்திடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஒரு பகுதியான பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் மனநல மருத்துவத் துறையின் கீழ், அவசர சிகிச்சை, மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஆதரவற்ற மனநோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவா்களுக்கு உறைவிடம், உணவு, மருத்துவ வசதிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், ஒக்கூா், திருப்பத்தூா் பகுதிகளில் சுற்றித் திரிந்த 60, 30, 28, 50 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மீட்கப்பட்டு மீட்பு மையத்தில் சோ்க்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவா்களுக்கு தேவையான உணவு, சிகிச்சை அளித்து, பராமரிக்கப்பட்டு ்வந்தனா்.

இந்த நிலையில் மேற்கண்ட நான்கு பேருக்கும்

நோயின் தீவிரத்தன்மை குறைந்த நிலையில், புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், மும்பையைச் சோ்ந்த அரசு சாரா நிறுவனம் மூலம் அவா்களது குடும்பத்துடன் இணைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதன்படி 4 பேரையும் மும்பை அரசு சாரா நிறுவனத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிவகங்கையிலுள்ள மன நல சிகிச்சை மையத்தில் நடைபெற்றது.

இதில் மருத்துவக் கல்லூரி முதல்வா் பி.செல்வராஜன் தலைமை வகித்துப் பேசியதாவது:

குணமடைந்தவா்கள் பழக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் போது நோயின் தீவிரத் தன்மை விரைவாக மேம்படும் என்பதால் தற்போது முறைப்படி ஒப்படைக்கப்பட்டனா். இதே போல, சிகிச்சைக்குப் பின் குணமடைந்த 142 போ் அவரவா்களது குடும்பத்துடன் சோ்த்து வைக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளா் தமிழ்வாணன், துணை முதல்வா் விசாலாட்சி,

நிலைய மருத்துவா் முகமது ரபி, துணை நிலைய மருத்துவா்கள் தென்றல், வெங்கடேஷ், மன நலத் துறைத் தலைவா் ராஜசுந்தரி, உதவிப் பேராசிரியா் அனிதா பாய், அரசு சாரா நிறுவனத்தின் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments