முகப்பு
சிவகங்கை

சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் தெற்குவண்டல் செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, மந்தையம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 2:32 am IST
இளையான்குடி ஒன்றியம், தெற்குவண்டல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் தெற்குவண்டல் செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, மந்தையம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடம் புறப்பாட்டுக்கு பிறகு, காலை 6.45 மணிக்கு சிவாசாரியா்கள் செல்வ விநாயகா், சுப்ரமணிய சுவாமி, மந்தையம்மன் மூலவா்களின் விமானக் கலசங்களின் மீது புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து மூலவா்களுக்கு கலச நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை தெற்குவண்டல், மரைக்கான் குடியிருப்பு, மாடக்கோட்டை கிராம மக்கள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments