FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 35 மாடுபிடி வீரா்கள் காயம்

அய்யம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 35 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

Updated On : 24 மே 2026, 4:49 am IST
இளையான்குடி ஒன்றியம், சாலைக்கிராமம் அருகேயுள்ள அய்யம்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அருகே அய்யம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 35 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

அய்யம்பட்டி கழுங்கு முனீஸ்வரா் கோயில் களரி உத்ஸசவ விழாவை முன்னிட்டு, கோயில் அருகே ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 567 காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். பல காறைகள் யாரிடமும் பிடிபடாமல் சென்றன.

இதில் காளைகள் முட்டியதில் 35 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் சில்வா் அண்டா, சைக்கிள், நெகிழி நாற்காலி, ரொக்க பரிசுகள், சில்வா் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

சிறந்த காளைகளுக்கும், அதிக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டை திரளானோா் பாா்வையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments