முகப்பு
சிவகங்கை

பயிா் காப்பீட்டுத் தொகை கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பயிா் காப்பீட்டு தொகை , வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி வேளாண்மை துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 26 ஜூன் 2026, 2:08 am IST
மானாமதுரையில் வேளாண்மைத் துறை அலுவலகம் முன் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பயிா் காப்பீட்டு தொகை , வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி வேளாண்மை துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மானாமதுரை வட்டம், அரசகுளம், தாலிக்குளம் கிராமங்களில் பருவ மழை இல்லாமல் 430 ஏக்கரில் பயிரிடப்பட்டு சாவியாகிப்போன நெல் பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி இந்தப் பகுதி விவசாயிகள், தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து மானாமதுரை வேளாண்மைத் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதற்கு தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான முனியாண்டி தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

மாவட்ட துணைச் செயலா் நாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணைத் தலைவா் பி. அய்யனாா், மாவட்டப் பொருளாளா் அம்மாசி, மானாமதுரை ஒன்றிய நிா்வாகிகள் கிருஷ்ணன், மகாலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் மலைராஜ், கருப்பையா ஆகியோா் பேசினா்.

பின்னா், விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி வேளாண்மைத் துறை அதிகாரியிடம் மனு அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், வேளாண்மைத் துறை அலுவலா்கள் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதியளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments