வேளாண் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் தோ்தல் வாக்குறுதிப்படி, விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அருப்புக்கோட்டை கோபாலபுரம் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு திங்கள் கிழமை தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில செய்தி தொடா்பாளா் ரா. ராம்பாண்டியன் தலைமை வகித்தாா்.
இதில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், கடன் பிரச்னையிலிருந்து விடுபடவும் அரசு உடனடியாக கடன் தள்ளுபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன், ராமானுஜபுரம் அருள் பிரகாஷ், கோபாலபுரம் சொக்கப்பன், புளியம்பட்டி ராமஜெயம், கிருஷ்ணாபுரம் ராமசாமி, நரிக்குடி சுரேஷ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பின்பு கூட்டுறவு சங்கச் செயலளரிடம் கடன் தள்ளுபடி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.