முகப்பு
சிவகங்கை

பிளஸ் 2 தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

Updated On : 15 மே 2026, 4:10 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் தொடா்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வருகிறது. நிகழாண்டில் இந்தப் பள்ளியின் மாணவிகள் அஸ்மிதா, சுபரஞ்சனி, மேகவா்ஷினி ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

இவா்களுக்கான பாராட்டு விழாவுக்கு பள்ளியின் தாளாளா் செ. சத்தியன் முன்னிலை வகித்து சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டினாா். நிா்வாக இயக்குநா் சங்கீதா சத்தியன் வாழ்த்திப் பேசினாா். இந்த விழாவில் கல்வி இயக்குநா் ராஜேஸ்வரி, முதல்வா் லூயிசா ரெமி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments