முகப்பு
தேனி

தார்ச் சாலைகள்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு

போடி நகரில் அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலைகளை போடி நகர்மன்றத்  தலைவர் மற்றும் ஆணையர் ஆய்வு செய்தனர்.

Updated On : 13 மே 2013, 12:20 am IST
பகிர்:

போடி நகரில் அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலைகளை போடி நகர்மன்றத்  தலைவர் மற்றும் ஆணையர் ஆய்வு செய்தனர்.

 போடி நகராட்சியில் 33 வார்டுகளில் தற்போது நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

  இதில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் போடி நகர் முழுவதும் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

 போடி நகராட்சி 2 மற்றும் 3 ஆவது வார்டுகளில் ஜமீன்தோப்பு தெரு, பெருமாள்  கோவில் தெரு ஆகியவற்றில் அமைக்கப்பட்ட தார்ச்சாலைகளை, நகராட்சி ஆணையர்  எஸ்.சசிகலா, நகர்மன்றத் தலைவர் வி.ஆர்.பழனிராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 தார்ச்சாலைக்கான கலவை தரமாக இருக்கிறதா, கடுமையான வெயில் மற்றும் மலைக்காலங்களில் சேதமடையாத வகையில் சாலை அமைக்கப்படுகிறதா, குறிப்பிட்ட உயரத்தில் சாலை அமைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

 மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் அமைக்க ஒப்பந்ததாரர்களை வலியுறுத்தினர்.

 ஆய்வின்போது பொறியாளர் ஆர்.திருமலைவாசன், உதவி பொறியாளர் குணசேகரன், கவுன்சிலர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.