முகப்பு
தேனி

கூடைப்பந்துப் போட்டி: தேனி மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையிலான போட்டியில் தேனி மாவட்ட ஆடவர் அணிக்கு வீரர்கள் தேர்வு

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:42 am IST
பகிர்:

தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையிலான போட்டியில் தேனி மாவட்ட ஆடவர் அணிக்கு வீரர்கள் தேர்வு பெரியகுளம் பிஎஸ்டி நினைவு விளையாட்டரங்கில் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. 
இதுகுறித்து தேனி மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழக தலைவர் பி.சி.சிதம்பரசூரியவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகம் நடத்தும் 18 வயதுக்குள்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான ஆடவர் கூடைப்பந்தாட்ட போட்டி ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கு பெறும் தேனி மாவட்ட ஆடவர் அணித் தேர்வு வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு, பெரியகுளம், தென்கரை பிஎஸ்டி நினைவு விளையாட்டரங்கில்  நடைபெறுகிறது.
இத்தேர்வில் கலந்துகொள்ளும் வீரர்கள் 1.1.2000-க்குப்பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பிறந்த தேதிக்கான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments