முகப்பு
தேனி

மரத்திலிருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி சாவு

உத்தமபாளையம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:43 am IST
பகிர்:

உத்தமபாளையம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
 க.புதுப்பட்டி பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனியாண்டி மகன் முருகன் (45). கூலித் தொழிலாளியான இவர், செவ்வாய்க்கிழமை அங்குள்ள புளிய மரத்தில் ஏறி விளைந்த புளிகளை  பறித்துள்ளார். அப்போது தவறி கீழே விழுந்த முருகன் பலத்த காயத்துடன் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments