முகப்பு
தேனி

மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை  நிறைவு விழா

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை  நிறைவு விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:19 am IST
பகிர்:

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை  நிறைவு விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 
தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில்,  மாணவியர் பேரவை நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். 
இயற்பியல் துறைத்தலைவி தவராணி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில், மாணவியர் பேரவை கடந்த ஓராண்டாக செய்த நிகழ்ச்சிகளை பாராட்டி  செயலாளர் என்.ராமகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார். 
மேலும் பல்வேறு துறை சார்ந்த மற்றும் நுண்கலைப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 விழாவில் இணைச் செயலர் ரா.வசந்தன், முதல்வர் ஜி.ரேணுகா, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பேரவை செயலர் நாகநந்தினி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.