முகப்பு
தேனி

தேனி மாவட்டத்தில் 22,256 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில்,  22,256 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜூலை 2018, 1:08 am IST
பகிர்:

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில்,  22,256 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கை, கால் ஊனமுற்ற 12,713 பேர், செவித்திறன் குறைபாடு உள்ள 2,389 பேர், கண் பார்வையற்ற 1,834 பேர், மன வளர்ச்சி குன்றிய 3,857 பேர், பல்வகை மாற்றுத் திறனாளிகள் 606 பேர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 641 பேர், புற உலக சிந்தனையற்ற 47 பேர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 169 பேர் என மொத்தம் 22,256 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள், சலுகைகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டு  4,332 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் மொத்தம் ரூ. 6 கோடியே 27 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments