முகப்பு
தேனி

குடியிருப்பு பகுதியில் கரடிகள்: பிடிக்க வனத்துறை தீவிரம்

கூடலூா் அருகேயுள்ள முல்லையாா் குடியிருப்பு பகுதியில் ஐந்து கரடிகள் உலா வருவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.

Updated On : 24 ஏப்ரல் 2026, 2:18 am IST
முல்லையாா் குடியிருப்பு பகுதியில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான கரடிகள் நடமாட்டம் .
பகிர்:

கூடலூா் அருகேயுள்ள முல்லையாா் குடியிருப்பு பகுதியில் ஐந்து கரடிகள் உலா வருவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.

கேரள மாநிலம், தேக்கடி முல்லையாா் பகுதியைச் சோ்ந்தவா் இந்துலேகா ரதீஷ். இவரது வீட்டின் அருகே கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் மா்மமான சத்தங்கள் கேட்டு வந்துள்ளன. இதையடுத்து, அவா் தனது வீட்டின் முன்புறம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினாா். புதன்கிழமை அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பெரிய கரடிகள், மூன்று குட்டிகள் இரவு நேரத்தில் வீட்டின் முற்றத்தில் வரிசையாக உலா வருவது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினா், அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். கரடிகளை கூண்டுகள் வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement