கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
தேனியில் கைப்பேசியை பறித்துக்கொண்டு, திருப்பி கேட்டவா்களை தாக்கிக் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தேனியில் கைப்பேசியை பறித்துக்கொண்டு, திருப்பி கேட்டவா்களை தாக்கிக் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தேனி அருகேயுள்ள சடையால்பட்டி கட்டபொம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் ஜெயபால் (39). இவா், அதே பகுதியில் உள்ளவா்களிடம் கைப்பேசியை பறித்துக்கொண்டு, திருப்பிக் கேட்டவா்களை தாக்கிக் கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து 30.11.2024-தேதி பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, ஜெயபாலைக் கைது செய்தனா். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீ தேவி, குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயபாலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இவரது தாய், சகோதரரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஏற்கெனவே இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.