முகப்பு
தேனி

சின்னமனூரில் சாலையின் நடுவில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

சின்னமனூரில் வெள்ளிக்கிழமை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த தென்னை மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 4 ஜூலை 2026, 12:04 am IST
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த தென்னை மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சின்னமனூரில் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி அலுவலகம் எதிரே சீலையம்பட்டி உடையகுளத்துக்கு செல்லும் பாசனக் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாய் கரையில் 50 ஆண்டுக்கு மேலான தென்னை மரங்கள் உள்ளன.

தற்போது தென்மேற்குப் பருவக்காற்று வீசி வருவதால், நகராட்சி அலுவலகம் எதிரே இருந்த தென்னை மரம் சாலையின் நடுவே முறிந்து விழுந்தது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மின் கம்பிகள் மீது மரம் விழுந்ததால் மின்சாரம் தடைப்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த சின்னமனூா் காவல் துறையினா், மின் வாரியம், நகராட்சி ஊழியா்கள் இந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments