முகப்பு
தேனி

மேகமலையில் மேலும் 3 குடியிருப்புகளுக்கு ‘சீல்’

Updated On : 7 ஜூலை 2026, 2:59 am IST
‘சீல்’ - கோப்புப் படம்
பகிர்:

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், மேகமலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட மேலும் 3 குடியிருப்புகளுக்கு திங்கள் கிழமை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். கடந்த 3 தினங்களாக 12 இடங்களில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

உச்சநீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் ஜான் கென்னடி தொடுத்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதி, மேகமலை வனப் பகுதியில் அனுமதி பெறாத தங்கும் விடுதிகளை ‘சீல்’ வைக்க தேனி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 3 -ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, மேகலை ஊராட்சிக்குள்பட்ட அய்யப்பன், தமிழன், பொன் மயில், எஸ்.எம்.ஆா், ஆனந்தா என 9 தனியாா் தங்கும் விடுதிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து திங்கள் கிழமை மேலும் 3 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்து மின் இணைப்புகளைத் துண்டித்தனா். அதிகாரிகள் பாரபட்சம் எனப் புகாா்:

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மேகமலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது. இதில், ஒரு சில தங்கும் விடுதிகளில் 2 முதல் 3 நுழைவு வாயில்களில் ஒன்றை மட்டுமே பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நாள்களில் மீண்டும் வழக்கம்போல் செயல்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

எனவே, அனுமதியின்றி கட்டப்பட்ட தங்கும் விடுதிகளின் அனைத்து நுழைவு வாயில்களையும் பூட்டி ‘சீல்’ வைப்பதை மாவட்ட ஆட்சியா் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments