FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
பகிர்:

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் குருசாமி (29). இவா், கடந்த 2023-ஆம் ஆண்டில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில், குற்றஞ்சாட்டப்பட்ட குருசாமிக்கு பாலியல் வன்முறை சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து ஏக காலத்தில் இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டுமென தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments