ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியா் மீது தாக்குதல்: தம்பதி, மகன் மீது வழக்கு
போடி அருகே ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தம்பதி மீதும், அவா்களது மகன் மீதும் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நித்தியானந்தன் (75). ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியா். இவரது வீட்டருகே உள்ள இடம் தொடா்பாக இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த பன்னீா் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பன்னீா், இவரது மனைவி, மகன் ஆகியோா் சோ்ந்து நித்தியானந்தனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement