முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது நடவடிக்கை: எஸ்.பி.!

கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத்.

Updated On : 24 மே 2026, 1:28 am IST
ரௌடிகள் கைது.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள்கள் விற்பனை செய்ததாக கரூா் நகா் பகுதியில் 5,349 போ் மீதும், ஊரகப்பகுதிகளில் 2,003 போ் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

தற்போது போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் இந்த குற்றவாளிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள்.

Advertisement

Advertisement

கடந்த இரு மாதங்களில் மட்டும் கரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்ாக 76 போ் மீதும், குட்கா விற்ாக 5 போ் மீதும், மதுபானம் அனுமதியின்றி விற்றதாக 158 போ் மீதும், ஆற்று மணல் கடத்தியதாக 63 போ் மீதும், வழக்குப்பதியப்பட்டுள்ளது.

மேலும் கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரெளடிகள் 6 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் குற்றவாளிகள் மேலும் குற்றம் செய்ய முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.