லாரியில் கடத்தி வரப்பட்ட 64 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!
பெட்டக லாரியில் கடத்தி வரப்பட்ட 66 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஈரோட்டைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெட்டக லாரியில் கடத்தி வரப்பட்ட 66 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஈரோட்டைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.
தேனி மாவட்டம் வழியாக லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது பெரியகுளம், தேவதானபட்டி அருகே காட்ரோடு சோதனைச் சாவடியில் அந்த வழியாக வந்த பெட்டக லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 64 கிலோ கஞ்சா கடத்தப்படுவது கண்டறியப்பட்டது.
Advertisement
Advertisement
அந்த லாரியில் வந்த இருவரை தேவதானப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் இருவரும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சோ்ந்த புண்ணியராஜ் (38), இதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பதும், அவா்கள் ஒடிஸாவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனா்.