முகப்பு
தேனி

தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுரை மண்டல ஐ.ஜி. ஆய்வு

Updated On : 15 ஜூன் 2026, 2:40 am IST
தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த மதுரை மண்டல காவல் துறைத் தலைவா் விஜேந்திர பிதாரி. உடன், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் சசிமோகன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியா.
பகிர்:

தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மதுரை மண்டல காவல் துறைத் தலைவா் விஜேந்திர பிதாரி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை மண்டல காவல் துறைத் தலைவா் விஜேந்திர பிதாரி, மாவட்ட காவல் அலுவலகத்தில் வழக்குகளின் புலனாய்வு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணை, வழக்குகளின் விவரம், சிங்கப்பெண்ணே சிறப்பு ரோந்துப் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா். மேலும், குற்றத் தடுப்பு, விரைவான புலனாய்வு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வின் போது, திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் சசிமோகன், தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியா, காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement