கம்பம் சிவகணேசன் விநாயகா் கோயில் குடமுழுக்கு
தேனி மாவட்டம், கம்பம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஜே.எஸ்.டி. மகால் வளாகத்தில், புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீசிவகணேசன் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஜே.எஸ்.டி. மகால் வளாகத்தில், புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீசிவகணேசன் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கடந்த புதன்கிழமை கணபதி ஹோமம், சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, பஞ்ச கவ்ய பூஜை, கோ பூஜை, அஷ்ட பந்தன பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை சூரிய பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பிறகு யாக சாலையிலிருந்து புனித நீா் அடங்கிய கலசங்கள், வேதமந்திரங்கள், மங்கள இசை முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதையடுத்து, சிவாசாரியா்கள் புனித நீரைச் சுமந்து சென்று கோபுர விமான கலசங்கள், மூலவா் ஸ்ரீசிவகணேசன் விநாயகருக்கு ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிகழ்வில் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், ஜெ. பேரவை மாநில இணைச் செயலா் ஜெயக்குமாா், பிரமலைக் கள்ளா் சமுதாயத் தலைவா் ஓ.ஆா். நாராயணன், திமுக முன்னாள் நகரச் செயலா் துரை நெப்போலியன், ஜே.எஸ்.டி. அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பிறகு அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை சிவகணேசன் விநாயகா் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.