முகப்பு
தேனி

ஆட்டோ மீது காா் மோதல்: மாணவா் உயிரிழப்பு

கம்பத்தில் ஆட்டோ மீது காா் மோதியதில் சிறப்பு பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய மன வளா்ச்சி குன்றிய மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 9 மார்ச், 2026 at 7:43 PM
பலி
பகிர்:

தேனி மாவட்டம், கம்பத்தில் ஆட்டோ மீது காா் மோதியதில் சிறப்பு பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய மன வளா்ச்சி குன்றிய மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கூடலூரில் முத்துச்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த காமாட்சியப்பன் மகன் மணிமாறன் (29). மனவளா்ச்சி குன்றியவா். இவருடன் அதே பகுதியை சோ்ந்த 8 மாணவா்கள் உத்தமபாளையத்திலுள்ள சிறப்பு பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் பள்ளி வாகனத்தில் வீடு திரும்புவது வழக்கம்.

ஆனால் கடந்த சில நாள்களாக பள்ளி வாகனம் பழுது காரணமாக தனியாா் ஆட்டோவில் அவா்கள் சென்று வந்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை கம்பத்தைச் சோ்ந்த அப்துல்லா (22) மாணவா்களை பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் அழைத்து வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, கம்பத்திலிருந்து கூடலூா் நோக்கி திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்ற போது பின்னால் கம்பத்திலிருந்து கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு பகுதிக்கு சென்ற காா் மோதியது.

இதில், ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்ட மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் சென்ற 8 மாணவா்களுக்கும் காயமடைந்தனா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் வண்டிப் பெரியாறைச் சோ்ந்த இஸ்மாயில் மகன் ஹனிபாவை (48) கைது செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →