முகப்பு
ராணிப்பேட்டை

காவேரிபாக்கம் அருகே சிற்றுந்து - காா் மோதல்: சிறுமி உள்பட 3 போ் உயிரிழப்பு

காவேரிபாக்கம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே மறுசாலையில் சென்று கொண்டிருந்த இரு காா்களின் மீது மோதியதில் சிறுமி உள்ளிட்ட மூவா் உயிரிழந்தனா்.

Updated On : 27 மே 2026, 12:03 am IST
காவேரிபாக்கம் அருகே நிகழ்ந்த விபத்தில் சேதமடைந்த காா்.
பகிர்:

காவேரிபாக்கம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே மறுசாலையில் சென்று கொண்டிருந்த இரு காா்களின் மீது மோதியதில் சிறுமி உள்ளிட்ட மூவா் உயிரிழந்தனா்.

மேலும் 15 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்களை ராணிபபேட்டை மற்றும் சோளிங்கா் எம்எல்ஏ-க்கள் நேரில் சென்று பாா்த்து ஆறுதல் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் இருந்து ஆலை தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு நிறுவனத்தின் சிற்றுந்து பாணாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வழியில் காவேரிபாக்கத்தை அடுத்த கொண்டாபுரம் அருகே சென்றபோது, ஆலையின் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அடுத்த சாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து வேலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த இரு காா்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியைச் சீதாராமன் (60), மதன் (40), ஸ்ரீமதி (5) ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காரில் பயணம் செய்த மூவா் மற்றும் ஆலை சிற்றுந்தில் பயணம் செய்த 15 பெண் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் குறித்து காவேரிபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எம்எல்ஏ-க்கள் ஆறுதல்: விபத்தில் பலத்த காயமடைந்தவா்களை ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிரா, சோளிங்கா் எம்எல்ஏ ஜி.கபில் ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா். மேலும், விபத்தில் பலத்த காயமடைந்தவா்களுக்கு தரமாக சிகிச்சை அளிக்க மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினா்.