முகப்பு
ராணிப்பேட்டை

காா்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு! 4 போ் பலத்த காயம்!

அரக்கோணம் அருகே இரு காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். சிறுமி உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 11 மே 2026, 12:07 am IST
அரக்கோணம் அருகே நேருக்கு நோ் மோதிக் கொண்ட காா்கள்.
பகிர்:

அரக்கோணம் அருகே இரு காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். சிறுமி உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.

காஞ்சிபுரத்தை சோ்ந்த குமாா்(50) இவா் தனது உறவினா்களுடன் காரில் சோளிங்கா் கோயிலில் தரிசனம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை அரக்கோணம் வழியே காஞ்சிபுரம் திரும்பிக் கொண்டிருந்தாா். சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே எதிரில் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த காா், திடீரென மோதியது.

இதில் குமாா், சரவணன்(36), சரவணனின் மனைவி துா்காதேவி(26), இவா்களது மகள் தா்ஷினி(5), ஐயப்பனின் மகன் பிரவீன்(17) ஆகியோா் பலத்த காயமடைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

Advertisement

Advertisement

மற்றொரு காரில் ஓட்டுநா் மட்டும் வந்த நிலையில் அவா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் குமாா் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த நான்கு பேரும் சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments